chennailibrary.com - சென்னை நூலகம் - Online Tamil Library - இணைய தமிழ் நூலகம்
http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
   

     அன்பு வாசகர்களே! தமிழ் நூல்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் துவங்கப்பட்டது தான் எமது சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) இணையதளம். விளம்பர வருவாய் மற்றும் உறுப்பினர் கட்டணம் மூலமே எமது தளம் செயல்படுகிறது. இருப்பினும், வாசகர்கள் விரும்பும் பல தமிழ் நூல்களைத் தொடர்ந்து வெளியிடவும், தளத்தின் பிற சேவைகள் மேம்படவும், அதிகப்படியான நிதி தேவைப்படுகிறது. எனவே வாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவியினை எமக்கு அளித்து உதவுமாறு வேண்டுகிறோம். நிதி அளிப்பவர்கள் விவரம் எமது இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் தாங்கள் அளிக்கும் நிதி மூலம் செயற்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரமும் வெளியிடப்படும். நன்றி. அன்புடன் கோ.சந்திரசேகரன்.

நிதி அளிக்கவும், நிதி அளித்தவர்கள் பட்டியலுக்கும், நிதி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றிய விவரங்களுக்கும் இங்கே சொடுக்கவும்

கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - தமிழில் இணையதளம் உருவாக்குவது எப்படி? (விலை ரூ.50) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - உலக சினிமா - ஓர் பார்வை (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - ஊசியும் நூலும் (விலை ரூ.40) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் (விலை ரூ.40) - பிரபலங்கள் சொன்ன குட்டிக் கதைகள் - 1 (விலை ரூ.35) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - மகளிருக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - இனிப்பு நோயின் கசப்பு முகம் (விலை ரூ.50) - பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள் (விலை ரூ.50) - பூவும் பிஞ்சும் (விலை ரூ.60) - சீனாவில் இன்ப உலா (விலை ரூ.60) - பொது அறிவுத் துளிகள் (விலை ரூ.30) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40) - திருநீலகண்டர் (2), இயற்பகையார் (3), இளையான்குடி மாறன் (4) (விலை ரூ.10) - ஏனாதிநாதர் (9), கண்ணப்பர் (10), குங்கிலியக்கலயர் (11) (விலை ரூ.10) - கதம்ப மலர்கள் (விலை ரூ.50) - மௌன வெளி (விலை ரூ.40) - சிந்தைகளின் சிதறல் (விலை ரூ.35) - சரணாகதி (விலை ரூ.125) - நந்தவனம் (விலை ரூ.70) - வழி விடுங்கள் (விலை ரூ.40) - தேவதை உலா (விலை ரூ.40) - வேணு கானம் (விலை ரூ.40) - கரையான் அரித்த கடிதங்கள் (விலை ரூ.60) - திருநாவுக்கரசர் (அப்பர்), சிறுத்தொண்டர் (விலை ரூ.10) - கடவுளின் வாசி இரகசியம் (விலை ரூ.20) - சங்கமம் (விலை ரூ.30) - தமிழியல் (விலை ரூ.50) - செம்புலச் சுவடுகள் (விலை ரூ.50) - வீழாதே தோழா (விலை ரூ.50) - அறுபத்துமூவர் அற்புத வரலாறு (விலை ரூ.250) - நேசிக்கிறேன்... (விலை ரூ.45) - அனிச்ச மலர்கள் (விலை ரூ.80) - ஒன்றில் ஒன்று (விலை ரூ.100) - சிட்டுக்குருவி (விலை ரூ.60) - சிந்தனை முழக்கங்கள் (விலை ரூ.45)

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.உறுப்பினராகச் சேர, ரூ.100 கட்டணத்தொகையை எமது ஏதாவதொரு வங்கி கணக்கிற்கு செலுத்திய பின், அதன் விவரத்தையும், உங்கள் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் எமக்கு மின்னஞ்சல் செய்யவும்.
தொடர்புக்கு: பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com

உறுப்பினர் பட்டியல்   |    உறுப்பினர் சலுகைகள்


செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் தர கேரளம் தயார்: உம்மன் சாண்டி
ஓ.பி.எஸ்., வீட்டின் அருகே தேர்தல் அதிகாரிகள் சோதனை
விருதுநகர்: கல்லூரி மாடியிலிருந்து தவறி விழுந்த பொறியியல் மாணவர் சாவு
ஐபிஎல்: 7விக்கெட்டில் மும்பை அணியை வீழ்த்தியது பெங்களூரு அணி
22ம் தேதிக்குப் பின் எஸ்.எம்.எஸ்.,களை மொத்தமாக அனுப்ப தடை : பிரவீண் குமார்
மேற்கு வங்கத்தில் 2ம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு கண்டெடுப்பு
திமுகவில் இணையவில்லை: டி. ரஜேந்தர் விளக்கம்
மெக்சிகோவில் கடும் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம்
எவரெஸ்ட் சிகரத்தில் பனிச்சரிவில் சிக்கி 13 பேர் பலி
கார்த்திக், டுமினி அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: (2014-04-20 - 07:10)


பத்மநாப சுவாமி கோயில் பொக்கிஷங்கள் தணிக்கை செய்யப்பட வேண்டும்: ஒரு நபர் விசாரணைக்குழு அறிக்கை
தரணிஷ் பப்ளிகேஷன்ஸ்
நிஜமாகா நிழல்கள் (விலை ரூ.50) - அதிசயங்கள்! உலக அதிசயங்கள்! (விலை ரூ.50) - கந்தர் சஷ்டி கவசம் (விலை ரூ.10) - ஸ்கந்த குரு கவசம், கந்தர் கலிவெண்பா (விலை ரூ.10) - கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி (விலை ரூ.10) - சண்முக கவசம், பகை கடிதல், குமாரஸ்தவம், சுப்ரமண்ய மாலை, முருகன் போற்றிகள், முருகன் அஷ்டோத்திர பாமாலை, திருப்புகழ் (விலை ரூ.10) - விநாயகர் அகவல், விநாயகர் கவசம், விநாயகர் திருவகவல், காரிய சித்தி மாலை, விநாயகர் துதி, பதினாறு கணபதி வழிபாடு (விலை ரூ.10) - திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, வாரணமாயிரம், திருப்பல்லாண்டு (விலை ரூ.10) - சென்னை சிவ தலங்கள் (விலை ரூ.10) - சென்னை நவக்கிரக தலங்கள் (விலை ரூ.10)
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடுகள்

வளர்ப்பு மகள் - 9

     சரவணன் பேச்சியில் அப்படியொரு மயக்கம் ஏற்படும். அதில் சொல்லோசை இருக்காது. மொழியடுக்கு இருக்காது. ஏற்ற இறக்கம் இருக்காது. எதுவுமே இல்லாதது போலத் தோன்றும் எளிய சாதாரண வார்த்தைகள், இயல்பான குரல், கைகளை நீட்டி முழக்காத நளினம், யாரோ நெருங்கிய சிநேகிதர் ஒருவர் நம்மிடம் மனம் விட்டுப் பேசுவது போன்ற பாணி, இதயமே வாயாக வந்திருப்பது போன்ற நேர்த்தி, பரிசுக்காக பரபரப்படையாத இயற்கைத்தன்மை, இத்தனையும் நிறைந்த அவனுக்கு, முதற் பரிசு கிடைக்கும் என்பது முடிவான விஷயம். அவன் பேசுவதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சில ‘வண்ணப் பூச்சிகள்’ மேடையில் நாக்காடுவதைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள் பெருந்திரளாகக் குழுமினார்கள்.

மேலும் படிக்க...


நித்திலவல்லி -8. திருமருத முன் துறைக்கு ஒரு வழி

     வருகிறவன் தன்னை நோக்கித்தான் வருகிறானா அல்லது வேறு காரியமாக வருகிறானா என்று இளையநம்பி சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருந்த போதே அவன் சொல்லி வைத்தது போல் இவன் எதிரே வந்து நின்று நல்லடையாளச் சொல்லைக் கூறிப் பதிலுக்கு இவனிடமிருந்து நல்லடையாளம் கிடைத்ததும் வணங்கினான். இருவரும் நல்லடையாளச் சொல்லைப் பரிமாறிக் கொண்டு தங்களுக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டவுடன் இளையநம்பி ஏதோ பேசத் தொடங்கிய போது வந்தவன் தன் வலது கை ஆள்காட்டி விரலை வாயிதழ்களின் மேல் வைத்துப் பேச வேண்டாம் என்பது போல் குறிப்புக் காட்டித் தன்னைப் பின் தொடருமாறு சைகை செய்துவிட்டு நடந்தான். வெள்ளியம்பல மண்டபத்தின் பின்புறத்திலிருந்த தோட்டத்தின் மற்றொரு கோடி வரை அவனை அழைத்துச் சென்றான் வந்தவன். அங்கிருந்த மதிற் சுவரை ஒட்டி ஒரு பாழ் மண்டபத்திற்கு வந்திருந்தார்கள் அவர்கள். அந்த இடத்திற்கு வந்ததும் அவனே தன் மௌனத்தைக் கலைத்து விட்டுப் பேசினான்.

மேலும் படிக்க...


நிசப்த சங்கீதம் - 4

     அவர் தான் குருசாமி சேர்வையாக இருப்பார் என்று முத்துராமலிங்கம் கருதிய மீசைக்கார மனிதர் ஆங்கிலத் தினசரியைப் படிப்பதிலிருந்து விலகி நிமிர்ந்து அவனைப் பார்த்தார். ‘பெல்ஸ்’ அவனை ஏதோ அபூர்வமான அதுவரை பார்த்திராத காட்டு மிருகம் ஒன்றைப் பார்ப்பது போல் பார்த்தது.

மேலும் படிக்க...


மாலவல்லியின் தியாகம் - அத்தியாயம் 9 - பார்த்தவரையில் போதும்!

     பூதி விக்கிரம கேசரி கொடும்பாளூர் கோட்டையைக் கட்டியது பற்றிப் பெருமையாகப் பராந்தகன் விவரித்தான் அல்லவா? அதைக் கேட்டதும், “இதை எப்படிச் சாமர்த்தியம், சாகசம் என்று சொல்லிக் கொள்ள முடியும்? காற்று வசதி இல்லாமல் ஒரு கோட்டையைக் கட்டுவது ஒரு பெருமையா...?” என்றார் புலிப்பள்ளியார்.

மேலும் படிக்க...


அநுக்கிரகா - 2

     கடைசியில் முத்தையாவுக்குத்தான் வெற்றி. கனிவண்ணனிடம் பொன்னுரங்கத்திற்கு உள்ள விரோதத்தைப் பயன்படுத்தி எப்படியோ சம்மதிக்க வைத்தார் அவர்.

     “நீ எவ்வளவோ பாடுபட்டு இந்த ஏரியாவிலே கட்சியை வளர்த்தே. அடி வாங்கி உதை வாங்கிக் கைக்காசைச் செலவழித்து நீ எல்லாத்தையும் பண்ணினாப் பிரயோசனம் கிடைக்கிற சமயத்திலே கனிவண்ணன் வந்து பிடிச்சுக்கிட்டான்.”

மேலும் படிக்க...


சத்திய சோதனை - 1 - 12. சாதிக் கட்டுப்பாடு

     பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையுடன் என் மனைவியை விட்டுவிட்டு, என் தாயாரின் அனுமதியையும் ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு நான் குதூகலமாகப் பம்பாய்க்குப் புறப்பட்டேன். அங்கே போய்ச் சேர்ந்ததும், ஜூன், ஜூலை மாதங்களில் இந்து மகாசமுத்திரத்தில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்றும், நான் இப்பொழுதுதான் முதல் முறையாகக் கப்பல் பிரயாணம் செய்வதால் நவம்பர் மாதம் வரையில் நான் கப்பலேற அனுமதிக்கக் கூடாது என்றும் நண்பர்கள் என் சகோதரரிடம் கூறினர். இப்பொழுதுதான் புயல் காற்றினால் ஒரு கப்பல் மூழ்கி விட்டது என்றும் யாரோ சொன்னார்கள். இதனால் என் சகோதரருக்கு மனக்கலக்கம் உண்டாயிற்று. உடனே கப்பல் பிரயாணம் செய்ய என்னை அனுமதிக்கும் அபாயத்திற்கு உடன்பட அவர் மறுத்து விட்டார். என்னைப் பம்பாயில் ஒரு நண்பரிடம் விட்டுவிட்டுத் தம் வேலைகளைக் கவனிக்க அவர் ராஜ்கோட்டுக்குத் திரும்பினார். என் பிரயாணச் செலவுக்கென்று வைத்திருந்த பணத்தை ஒரு மைத்துனரிடம் கொடுத்து, வைத்திருக்கச் சொல்லிவிட்டு, எனக்குத் தேவையான உதவிகளையெல்லாம் செய்யுமாறு, சில நண்பர்களிடம் சொல்லிப் போனார்.

மேலும் படிக்க...


கூட்டுக் குஞ்சுகள் - 2

     குட்டிச் சுவர்களும் பிரிந்த கூரைகளும் கவிழ்ந்த கூடைகள் போன்ற ஆட்டுக் குடில்களும் இடை இடையே முட்செடிகளும் குப்பை கழிவு மேடுகளுமான சின்னப்பட்டியில் சுமார் அறுபது குடும்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மழை விழுந்து மண் பசைக்கும் நாட்களில் தான் காட்டு வேலை; கஞ்சிக்குத் தானியம் கிடைக்கும். ஏனைய நாட்களில் வேலிக்கருவை வெட்டிச் சுமந்தோ, ஆடுகள் மேய்த்தோ, பிழைப்பதைத் தவிர வருவாய்க்கு வழியில்லை. நாலைந்தாண்டுகளாக, இளஞ்சேரன் தீப்பெட்டித் தொழிற்சாலை வண்டி வந்து, இங்கே மண்ணை அளைந்து கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் பசி பசி என்று பிடுங்கி எடுத்துக் கொண்டுமிருந்த சிறுவர் சிறுமியரைக் கொண்டு செல்கிறது. வாரா வாரம் சனிக்கிழமைகளில், காசைக் கண்களால் பார்க்கின்றனர்; ஆசைகள் குமிழியிட்டுக் கொப்புளிக்கின்றன.

மேலும் படிக்க...


புதிய சிறகுகள் - 10

     கழுத்துப் புருஷனையும் விடப் பந்தமுள்ளவன், இந்த வயிற்றுப் புருஷன். இவனை இரத்தத்தோடு சதையோடு ஊட்டி வளர்த்துத் தன்னுள் ஒரு பகுதியாக வைத்திருந்து பிய்த்து எறிவது போல் வேறாக்க இடம் கொடுக்கிறாள். அவன் முகம் வாடும் போது இங்கே உணர்வுகள் துடிக்கின்றன. அவன் சந்தோஷம் தான் தன் மலர்ச்சி என்று குருட்டுத்தனமான கோட்டில் அவள் உணர்வுகள் பழக்கப் பட்டிருக்கின்றன. எட்டரை மணிக்குப் பள்ளிக்குப் போவதற்கு முன் வயிற்றில் சூடாகப் போட்டுப் பழக்கப்படுத்தி விட்டால், எட்டரைமணிக்கு அமிலத்தைச் சுரப்பித்துப் பசியுணர்வை மிஞ்சிவிடும் பழக்கத்தைப் போல் இந்த உணர்வுகளுக்கும் அறிவார்ந்த தெளிவுக்கும் சம்பந்தமே இல்லாமல் போகின்றன.

மேலும் படிக்க...


சேற்றில் மனிதர்கள் - 2

     தஞ்சையிலிருந்து புதுக்குடி வழியாகக் கிளியந்துறைக்கு வரும் பஸ் அது ஒன்று தான். காலையில் ஏழு மணிக்கு வந்து, ஏழரை மணிக்குத் திரும்பி விடும். பத்து மணிக்குத் தஞ்சை செல்லும். கிளியந்துறைக்கு மறுபடியும் மாலை ஐந்து மணியளவில் புதுக்குடியில் இருந்து ஒரு பஸ் வந்து எட்டிப் பார்க்கும். பல நாட்களில் அது சோம்பலாக வராமலும் இருந்து விடும்.

மேலும் படிக்க...


மதுரையை மீட்ட சேதுபதி - அத்தியாயம் - 6. கதலியின் சபதம்

     கன்னிவாடி பாளையக்காரனான சின்னக்காட்டீரன் தன் வீரர்களுடன் அரண்மனையை விட்டு வெளியே வந்தான். கொஞ்ச தூரம் ராஜபாட்டையிலேயே சென்று பின் தன் புரவியை நிறுத்திக் கொண்டு தன் வீரர்களிடம் மதுரை நகரை விட்டு கடந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனக்காக காத்திருக்கும்படி பணித்தான். அவர்கள் மேலே சென்ற பின் தன் புரவியை ராஜபாட்டையை விட்டு வீதிகளில் செலுத்தி வணிகர் வீதியை அடைந்தான். புரவியினின்றும் குதித்து அதன் கடிவாளத்தைப் பற்றியபடி பார்வையை அங்கும் இங்கும் துழாவியபடி நடக்க ஆரம்பித்தான்.

மேலும் படிக்க...


பொன்னகர்ச் செல்வி - 4

     பூம்புகார் தோன்றிய சில காலத்திலேயே, அங்கு மாட மாளிகைகளும் மாபெரும் மாளிகைகளும் மன்னர் தம் கோட்டமும் அமைந்து விட்டன. பிற்காலச் சோழர்கள் தான் உறையூரையோ, கங்கை கொண்ட சோழ புரத்தையோ தலைநகராகக் கொண்டார்களேயன்றி அடிநாளில் ஏன், விஜயாலய சோழன் காலத்திலிருந்து புகார்தான் தலைநகராயிருந்து வந்தது. பிற்காலச் சோழர்கள் வேறு பகுதியில் தலைநகரேற்றாலும் புகார்த் துறைப்பொருள் கோட்டையை மறந்தவரில்லை. ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோ இங்கு வந்து தங்கிச் சென்றனர். தவிரவும் கடல் கடந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் புகாரைத்தான் முக்கியமாகக் கருதி வந்து சென்றனரேயன்றி இதர கடற்துறை நகரங்களை அவ்வளவாக நாடியதில்லை. பெரிய பெரிய வணிகர்களைக் கொண்ட புகார் நகரத்தில் ஏனைய நாட்டு அரசப் பிரதிநிதிகளும் தங்கியிருந்ததால் ஏனைய நகரங்களின் முக்கியத்துவமும் - அரசர் தலைநகர் ஒன்றைத் தவிர - குறைந்து விட்டது.

மேலும் படிக்க...


மணிபல்லவம் - 34. திருநாங்கூர் அடிகள்

     பூம்புகாரின் ஆரவாரமும், வாழ்க்கை வேகமும், சோழர் பேரரசின் தலைநகரமென்ற பெருமையும் நாங்கூருக்கு இல்லாவிட்டாலும் அமைதியும் அழகுங் கூடியதாயிருந்தது அந்தச் சிறு நகரம். எங்கு நோக்கினும் பசும்புல் வெளிகளும், வெறுமண் தெரியாமல் அடர்ந்த நறுமண மலர்ச் சோலைகளும், மரக்கூட்டங்களுமாகப் பசுமைக் கோலங் காட்டியது அந்த ஊர். வெயில் நுழையவும் முடியாத பசுமைக்குள் மறைந்திருந்த அழகு காரணமாக நாங்கூருக்குப் ‘பொழில் நகரம்’ என்று சோழ நாட்டுக் கவிஞர்கள் புகழ்ப் பெயர் சூட்டியிருந்தார்கள்.

மேலும் படிக்க...


அபிதா - 9

     சாவித்ரியை ஊர்க் காரியங்களுக்கு மாமி விட மாட்டேன்கிறாள். “நன்னாயிருக்கு வந்த இடத்தில் நீங்கள் வேலை செய்யறது? நீங்கள் வந்து எங்களோடே தங்கியிருக்கிறதே எங்கள் பாக்கியம்.”

     மாமி நன்றாகப் பேசுகிறாள். குரல் பெரிது. கூச்சமுமில்லை. நான் கூடத்திலிருக்கிறேன். சமையலறையிலிருந்து அவள் கர்ஜனை எட்டுகிறது. சில பேருக்கு அவர்கள் குரலே அவர்கள் விளம்பரம். நாங்கள் இலவசத்துக்குத் தங்க மாட்டோம் என்று அவளுக்குத் தெரியும். அந்த மகிழ்ச்சியை அவள் தெரிவிக்கும் முறை இப்படித்தான் போலும்!
மேலும் படிக்க...


வாடா மல்லி - 2

     சுயம்பு, கத்திக் கத்திக் களைத்துப் போனான். அப்பாவையும், அம்மாவையும், திட்டித் திட்டி அலுத்துப் போனான்.

     அந்தப் பெட்டிமேல் அவலத்தின் அவலமாக உட்கார்ந்திருந்தான். சவுக்குத் தோப்பில் ஊளையிட்டுக் கொண்டிருந்த நரிகள், அவன் இதுவரை கத்திய கத்தலை சக்தி வாய்ந்த ஒரு மிருகத்தின் கர்ஜனையாக நினைத்து அங்குமிங்குமாய்ச் சிதறின. ஆனால் இப்போது அவன் தலையில் கைவைத்து, தானே தானேயாய், தன்னந்தனியாய் உட்கார்ந்திருப்பதை உணர்ந்து, கால் கிலோ மீட்டர் தொலைவு வரை நெருங்கி அவனைப் பார்த்து அரைவட்டம் போட்டன.
மேலும் படிக்க...


சென்னைநூலகம்.காம் தளத்தின் நூல்களின் பட்டியலை உங்கள் தளத்தில் கொடுக்க:
<iframe src=http://www.chennailibrary.com/
ebooks/ebooksindex.html width=250 height=230
frameborder=0 scrolling=auto align=left
marginwidth=0></iframe>


இணைய பக்க முகவரி: http://chennailibrary.com/சமகால இலக்கியம்


பழந்தமிழ் இலக்கியம்

ஆன்மீகம்
தினசரி தியானம்அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
அலை ஓசை
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனி எல்லாமே நீயல்லவோ...
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
காக்கும் இமை நானுனக்கு
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சேற்றில் மனிதர்கள்
சோலைமலை இளவரசி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பட்டினப்பாலை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மணிபல்லவம்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மருத வரை உலா
மலைபடுகடாம்
முத்தொள்ளாயிரம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேருக்கு நீர்
தேடல்
தேடல்