உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 25 ... 241. தலைமகள் கூற்று ''துனி இன்று இயைந்த துவரா நட்பின் இனியர் அம்ம, அவர்'' என முனியாது நல்குவர் நல்ல கூறினும், அல்கலும், பிரியாக் காதலொடு உழையர் ஆகிய நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை 5 மூங்கில் இள முளை திரங்க, காம்பின் கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து அருவி ஆன்ற வெருவரு நனந்தலை, பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி, தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை 10 புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும் அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய் வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச் செம் முக மந்தி ஆடும் 15 நல் மர மருங்கின் மலை இறந்தோரே! பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது.
பாலை
காவன் முல்லைப் பூதனார் 242. தோழி கூற்று அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச் சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை, பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம், 5 செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் பண்பு தர வந்தமை அறியாள், ''நுண் கேழ் முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு அறிதல் வேண்டும்'' என, பல் பிரப்பு இரீஇ, அறியா வேலற் தரீஇ, அன்னை 10 வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி, மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம், செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள், நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய, 15 முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ் முயங்கல் இயைவதுமன்னோ தோழி! நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில் பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச் சாந்த மென் சினை தீண்டி, மேலது 20 பிரசம் தூங்கும் சேண் சிமை வரையக வெற்பன் மணந்த மார்பே! தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
குறிஞ்சி
பேரிசாத்தனார் 243. தலைமகள் கூற்று அவரை ஆய் மலர் உதிர, துவரின வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப, இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக் கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய, பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு 5 பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக் கடிது வந்து இறுத்த கண் இல் வாடை! ''நெடிது வந்தனை'' என நில்லாது ஏங்கிப் பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை 10 நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல; பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது நமக்கே எவ்வம் ஆகின்று; அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே! 15 தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத், தலைமகள் ''ஆற்றேன்'' என்பது படச் சொல்லியது.
பாலை
கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் 244. தலைமகன் கூற்று பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை பகல் உறை முது மரம் புலம்பப் போகி, முகை வாய் திறந்த நகை வாய் முல்லை கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை 5 வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு இனிதுகொல், வாழி தோழி? என, தன் பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப, அருந் துயர் உடையள் இவள் என விரும்பிப் 10 பாணன் வந்தனன், தூதே; நீயும் புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி, நெடுந் தேர் ஊர்மதி, வலவ! முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே! வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
முல்லை
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 245. தலைமகன் கூற்று ''உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார் நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்'' என மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி, மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில், 5 செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை வல் வில் இளையர் தலைவர், எல் உற, வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை, அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில், மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள் 10 கான யானை வெண் கோடு சுட்டி, மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற, நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக் 15 குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண், குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் கல் நெடுங் கவலைய கானம் நீந்தி, அம் மா அரிவை ஒழிய, 20 சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே. பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு அழுங்கியது.
பாலை
மதுரை மருதன் இளநாகனார் 246. தோழி கூற்று பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக, நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் மலி நீர் அகல் வயல் யாணர் ஊர! போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு 5 தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு ஆடினை என்ப, நெருநை; அலரே காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணிவாயில், சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் 10 இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய, பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, மொய் வலி அறுத்த ஞான்றை, தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே. தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது.
மருதம்
பரணர் 247. தலைமகள் கூற்று மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து, இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை, கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின், 5 பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும் அரிய கானம் என்னார், பகை பட முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக் கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி, 10 படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின் பாறு கிளை சேக்கும் சேண் சிமைக் கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பாலை
மதுரை மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார் 248. தோழி கூற்று நகை நீ கேளாய் தோழி! அல்கல்; வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ, இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து, அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற 5 தறுகட் பன்றி நோக்கி, கானவன் குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது, ''அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்'' என, எய்யாது பெயரும் குன்ற நாடன் 10 செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி அவிழ்ந்து, ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை, ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து துயல்வர, இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை; வல்லே என் முகம் நோக்கி, 15 ''நல்லை மன்!'' என நகூஉப் பெயர்ந்தோளே. இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்ப, தோழி சொல்லியது.
குறிஞ்சி
கபிலர் 249. தலைமகள் கூற்று அம்ம வாழி, தோழி! பல் நாள் இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார் விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும் பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி, 5 சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ, நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண் பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார் 10 பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ, தோகைத் தூவித் தொடைத் தார் மழவர் நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த 15 வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து, வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி, உழை மான் இன நிரை ஓடும் கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே. தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பாலை
நக்கீரனார் 250. தோழி கூற்று எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர் மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப, மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர, கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட, 5 கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி, தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன், வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும் மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய், 10 அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி, இறை வளை நெகிழ்ந்த நம்மொடு துறையும் துஞ்சாது, கங்குலானே! தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது.
நெய்தல்
செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|