உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 38 ... 371. தலைமகன் கூற்று அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை, செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர் கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி, குறு நெடுந் துணைய மறி புடை ஆட, புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை 5 மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது, எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும், பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம், எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து, 10 என்னஆம் கொல் தாமே ''தெண் நீர் ஆய் சுனை நிகர் மலர் போன்ம்'' என நசைஇ வீ தேர் பறவை விழையும் போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே? பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
எயினந்தை மகன் இளங்கீரனார் 372. தலைமகன் கூற்று அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப, பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை, அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண், வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து, 5 வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய், இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல், ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி, நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் 10 ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும், பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா, மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர் கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து, 15 ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே. அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
குறிஞ்சி
பரணர் 373. தலைமகன் கூற்று முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர் எழுந்து, மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து, பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி, செது காழ் சாய்ந்த முது காற் பொதியில், அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று, 5 பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர, மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப, தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு, தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்; இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை, 10 கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி, வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா, ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து, பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல் 15 அண்ணல் யானை அடு போர் வேந்தர் ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில் ஓர் எயில் மன்னன் போல, துயில் துறந்தனள்கொல்? அளியள் தானே! பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் 374. தலைமகன் கூற்று மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி, மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு, பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ, போழ்ந்த போலப் பல உடன் மின்னி, தாழ்ந்த போல நனி அணி வந்து, 5 சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி, இடியும் முழக்கும் இன்றி, பாணர் வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை, 10 செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில், குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி, மணி மண்டு பவளம் போல, காயா அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய, கார் கவின் கொண்ட காமர் காலை, 15 செல்க, தேரே நல் வலம் பெறுந! பெருந் தோள், நுணுகிய நுசுப்பின், திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே! பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
முல்லை
இடைக்காடனார் 375. தலைமகன் கூற்று ''சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின் இனைதல் ஆனாய்'' என்றிசின் இகுளை! அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர் கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும் கல்லா இளையர் கலித்த கவலை, 5 கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும் நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல், அத்த எருவைச் சேவல் சேர்ந்த அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல், எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன் 10 விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார், செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி, வம்ப வடுகர் பைந் தலை சவட்டி, கொன்ற யானைக் கோட்டின் தோன்றும், 15 அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர் நோய் இலர் பெயர்தல் அறியின், ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே. பிரிவிடை வேறுபட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது.
பாலை
இடையன் சேந்தங் கொற்றனார் 376. பரத்தை கூற்று செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன் கல்லா யானை கடி புனல் கற்றென, மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை, ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, 5 தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, 10 காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ! நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின் பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின் அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி, வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய, 15 துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக் குரங்குஉளைப் புரவிக் குட்டுவன் மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே! காதற்பரத்தை புலந்து சொல்லியது.
மருதம்
பரணர் 377. தலைமகன் கூற்று கோடை நீடலின், வாடு புலத்து உக்க சிறு புல் உணவு, நெறி பட மறுகி, நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர் பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர, 5 கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து, நரை மூதாளர் அதிர் தலை இறக்கி, கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய, வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று, பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் 10 இன்னா ஒரு சிறைத் தங்கி, இன் நகைச் சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி, வம்பலர் ஆகியும் கழிப மன்ற நசை தர வந்தோர் இரந்தவை இசை படப் பெய்தல் ஆற்றுவோரே! 15 பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.
பாலை
மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் 378. தலைமகள் கூற்று ''நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின், வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள, வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை நன் பொன் அன்ன நறுந் தாது உதிர, காமர் பீலி ஆய் மயில் தோகை 5 வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக் கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல ஆடு கள வயிரின் இனிய ஆலி, பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் 10 பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும், உடன்ற அன்னை அமரா நோக்கமும், வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச் சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு குட கடல் சேரும் படர் கூர் மாலையும், 15 அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, யாங்ஙனம் வாழ்தி?'' என்றி தோழி! நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர் உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு அள் இலைப் பலவின் கனி கவர் கைய 20 கல்லா மந்தி கடுவனோடு உகளும் கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து, பாடு இன் அருவி சூடி, வான் தோய் சிமையம் தோன்றலானே. இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது.
குறிஞ்சி
காவட்டனார் 379. தலைமகன் கூற்று நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய, தெருளாமையின் தீதொடு கெழீஇ, அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து, ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே! நினையினைஆயின், எனவ கேண்மதி! 5 விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை, பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி, நனவின் இயன்றதுஆயினும், கங்குல் கனவின் அற்று, அதன் கழிவே; அதனால், விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி, 10 சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப, செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு, எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி, மெய் புகுவன்ன கை கவர் முயக்கின் 15 மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின் பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி, செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு, உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல், 20 அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள் மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர, ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று, உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப் பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த 25 நிரம்பா நீள் இடைத் தூங்கி, இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே? முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ 380. தோழி கூற்று தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, ''நும் ஊர் யாது?'' என்ன, நணி நணி ஒதுங்கி, முன் நாள் போகிய துறைவன், நெருநை, அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன், 5 தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம் அலவற் காட்டி, ''நற்பாற்று இது'' என, நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே; உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்; நாம் எதிர் கொள்ளாம்ஆயின், தான் அது 10 துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்; வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ? அம்ம, தோழி! கூறுமதி நீயே. பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது.
நெய்தல்
மதுரை மருதன் இளநாகனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|