உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய பதிற்றுப் பத்து ... தொடர்ச்சி - 12 ... 66. வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக்
கூறுதல்
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி, படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல! 'இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார் வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி, 5 கொன்று புறம் பெற்ற பிணம் பயில் அழுவத்து, தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின் அம்பண அளவை விரிந்து உறை போகிய ஆர் பதம் நல்கும்' என்ப கறுத்தோர் உறு முரண் தாங்கிய தார் அருந் தகைப்பின், 10 நாள் மழைக் குழூஉச் சிமை கடுக்கும் தோன்றல் தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின், தார் புரிந்தன்ன வாளுடை விழவின், போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப, 15 பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை கடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும், வான் பளிங்கு விரைஇய, செம் பரல் முரம்பின், இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம் அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே. 20 துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : புதல் சூழ் பறவை 66. வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக்
கூறுதல்
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி, படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல! 'இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து, ஒன்னார் வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி, 5 கொன்று புறம் பெற்ற பிணம் பயில் அழுவத்து, தொன்று திறை தந்த களிற்றொடு, நெல்லின் அம்பண அளவை விரிந்து உறை போகிய ஆர் பதம் நல்கும்' என்ப கறுத்தோர் உறு முரண் தாங்கிய தார் அருந் தகைப்பின், 10 நாள் மழைக் குழூஉச் சிமை கடுக்கும் தோன்றல் தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின், தார் புரிந்தன்ன வாளுடை விழவின், போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப, 15 பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை கடத்திடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும், வான் பளிங்கு விரைஇய, செம் பரல் முரம்பின், இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம் அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே. 20 துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : புதல் சூழ் பறவை 67. கொடைச் சிறப்பு
கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர், கடன் அறி மரபின் கை வல் பாண! தென் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை- கொல் படை தெரிய, வெல் கொடி நுடங்க, 5 வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப, பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர, அமர்க்கண் அமைந்த அவிர் நிணப் பரப்பின் குழூஉச் சிறை எருவை குருதி ஆர, தலை துமிந்து எஞ்சிய ஆண் மலி யூபமொடு 10 உரு இல் பேய் மகள் கவலை கவற்ற, நாடுடன் நடுங்க, பல் செருக் கொன்று; நாறு இணர்க் கொன்றை வெண் போழ்க் கண்ணியர், வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர், நெறி படு மருப்பின் இருங் கண் மூரியொடு 11 வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர் எஃகு ஆடு ஊனம் கடுப்ப, மெய் சிதைந்து; சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன்- மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய கடும் பறைத் தும்பி சூர் நசைத் தாஅய், 12 பறை பண் அழியும் பாடு சால் நெடு வரைக் கல் உயர் நேரிப் பொருநன், செல்வக் கோமான் பாடினை செலினே. துறை : பாணாற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : வெண் போழ்க் கண்ணி 68. காம வேட்கையின் ஓடாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்பு
கால் கடிப்பு ஆகக் கடல் ஒலித்தாங்கு, வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண், கடுஞ் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர, வெவ் வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது 5 உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய, நெஞ்சு புகல் ஊக்கத்தர், மெய் தயங்கு உயக்கத்து இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது, வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு, கட் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன், 10 அருங் கள் நொடைமை தீர்ந்த பின், மகிழ் சிறந்து, நாமம் அறியா ஏம வாழ்க்கை வட புல வாழ்நரின் பெரிது அமர்ந்து, அல்கலும் இன் நகை மேய பல் உறை பெறுபகொல்- பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ, 15 நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின், ஓவு உறழ் நெடுஞ் சுவர் நாள் பல எழுதிச் செவ் விரல் சிவந்த அவ் வரிக் குடைச்சூல், அணங்கு எழில் அரிவையர்ப் பிணிக்கும் மணம் கமழ் மார்ப! நின் தாள் நிழலோரே? 20 துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : ஏம வாழ்க்கை 69. மன்னவனது ஆள்வினைச் சிறப்பினை அவன் குடி வரலாற்றொடு
படுத்துச் சொல்லுதல்
மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி, வரைமிசை அருவியின் வயின் வயின் நுடங்க, கடல் போல் தானைக் கடுங் குரல் முரசம் கால் உறு கடலின் கடிய உரற, எறிந்து சிதைந்த வாள், 5 இலை தெரிந்த வேல், பாய்ந்து ஆய்ந்த மா, ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு படுபிணம் பிறங்க நூறி, பகைவர் கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே!- 10 நின்போல், அசைவு இல் கொள்கையர் ஆகலின், அசையாது ஆண்டோ ர் மன்ற, இம் மண் கெழு ஞாலம்- நிலம் பயம் பொழிய, சுடர் சினம் தணிய, பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப, விசும்பு மெய் அகல, பெயல் புரவு எதிர, 15 நால் வேறு நனந்தலை ஓராங்கு நந்த, இலங்கு கதிர்த் திகிரி நின் முந்திசினோரே. துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : மண் கெழு ஞாலம் 70. வென்றிச் சிறப்பொடு பிற சிறப்புக்களையும் கூறி,
வாழ்த்துதல்
களிறு கடைஇய தாள், மா உடற்றிய வடிம்பு, சமம் ததைந்த வேல், கல் அலைத்த தோள், வில் அலைத்த நல் வலத்து, 5 வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக் குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு, தீம் சுனை நீர் மலர் மலைந்து, மதம் செருக்கி, உடை நிலை நல் அமர் கடந்து, மறம் கெடுத்து, கடுஞ் சின வேந்தர் செம்மல் தொலைத்த 10 வலம் படு வான் கழல் வயவர் பெரும! நகையினும் பொய்யா வாய்மை, பகைவர் புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மை, பெண்மை சான்று பெரு மடம் நிலைஇக், கற்பு இறை கொண்ட கமழும் சுடர் நுதற் 15 புரையோள் கணவ! பூண் கிளர் மார்ப! தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற, வேள்வியில் கடவுள் அருத்தினை; கேள்வி உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை; வணங்கிய சாயல், வணங்கா ஆண்மை, 20 இளந் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி, தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்! மாடோ ர் உறையும் உலகமும் கேட்ப இழுமென இழிதரும் பறைக் குரல் அருவி முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் 25 அயிரை நெடு வரை போல, தொலையாதாக, நீ வாழும் நாளே! துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் பெயர் : பறைக் குரல் அருவி பதிகம்
மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த நெடு நுண் கேள்வி அந்துவற்கு ஒரு தந்தை ஈன்ற மகள், பொறையன் பெருந்தேவி, ஈன்ற மகன், நாடு பதி படுத்து, நண்ணார் ஓட்டி, வெருவரு தானை கொடு செருப் பல கடந்து, 5 ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி, மாய வண்ணனை மனன் உறப் பெற்று, அவற்கு ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து, புரோசு மயக்கி, 10 மல்லல் உள்ளமோடு மாசு அற விளங்கிய செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடினார் பத்துப் பாட்டு. அவைதாம்: புலா அம் பாசறை, வரைபோல் இஞ்சி, அருவி ஆம்பல்,
உரைசால் வேள்வி, நாள் மகிழ் இருக்கை, புதல் சூழ் பறவை, வெண் போழ்க்
கண்ணி, ஏம வாழ்க்கை, மண் கெழு ஞாலம், பறைக் குரல் அருவி; இவை பாட்டின்
பதிகம்.
பாடிப் பெற்ற பரிசில்: சிறுபுறம் என நூறாயிரம் காணம் கொடுத்து, 'நன்றா' என்னும் குன்று ஏறி நின்று, தன் கண்ணிற் கண்ட நாடு எல்லாம் காட்டிக் கொடுத்தான் அக் கோ. செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான். ஏழாம் பத்து முற்றும்.
|