உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய பதிற்றுப் பத்து ... தொடர்ச்சி - 7 ... ஐந்தாம் பத்து
பாடினோர் : பரணர்
பாடப்பட்டோ ர் : கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் 41. வென்றிச் சிறப்பு
புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப; பண் அமை முழவும், பதலையும், பிறவும், கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி, காவில் தகைத்த துறை கூடு கலப் பையர் 5 கை வல் இளையர் கடவுள் பழிச்ச; மறப் புலிக் குழூஉக் குரல் செத்து, வயக் களிறு வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கைப் பூவுடை பெருஞ் சினை வாங்கிப் பிளந்து, தன் மா இருஞ் சென்னி அணிபெற மிலைச்சி, 10 சேஎர் உற்ற செல்படை மறவர், தண்டுடை வலத்தர், போர் எதிர்ந்தாங்கு, வழை அமல் வியன் காடு சிலம்பப் பிளிறும் மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம் ஒன்று இரண்டு அல, பல கழிந்து, திண் தேர் 15 வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே: தாவல் உய்யுமோ மற்றே-தாவாது வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர் முரசுடைப் பெருஞ் சமத்து அரசு படக் கடந்து, வெவ்வர் ஓச்சம் பெருக, தெவ்வர், 20 மிளகு எறி உலக்கையின், இருந் தலை, இடித்து, வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் எடுத்தேறு ஏய கடிப்புடை வியன்கண் வலம் படு சீர்த்தி ஒருங்குடன் இயைந்து கால் உளைக் கடும் பிசிர் உடைய, வால் உளைக் 25 கடும் பரிப் புரவி ஊர்ந்த நின், படும் திரைப் பனிக் கடல், உழந்த தாளே! துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : சுடர் வீ வேங்கை 42. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
இரும் பனம்புடையல், ஈகை வான் கழல், மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள் ஊசி நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின், அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5 தும்பை சூடாது மலைந்த மாட்சி, அன்னோர் பெரும! நன்னுதல் கணவ! அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ! மைந்துடை நல் அமர்க் கடந்து, வலம் தரீஇ; இஞ்சி வீ விராய பைந் தார் பூட்டி, 10 சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்குஇருக்கை, தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம் ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து; கோடியர் பெருங் கிளை வாழ, ஆடு இயல் உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின்- 15 மன்பதை மருள, அரசு படக் கடந்து, முந்து வினை எதிர் வரப் பெறுதல் காணியர், ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து மான மைந்தரொடு மன்னர் ஏத்த, நின் தேரொடு சுற்றம் உலகு உடன் மூய, 20 மா இருந் தெண் கடல் மலி திரைப் பௌவத்து, வெண் தலைக் குரூஉப் பிசிர் உடைய, தண் பல வரூஉம் புணரியின் பலவே. துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : தசும்பு துளங்கு இருக்கை 43. மன்னனின் செல்வ மகிழ்ச்சி
கவரி முச்சி, கார் விரி கூந்தல், ஊசல் மேவல், சேயிழை மகளிர் உரல் போல் பெருங் கால், இலங்கு வாள் மருப்பின், பெருங் கை, மதமாப் புகுதரின், அவற்றுள் விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ 5 கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை வட திசை எல்லை இமயம் ஆக, தென்அம் குமரியொடு ஆயிடை அரசர் முரசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ, சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த 10 போர் அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ! இரும் பணை திரங்கப் பெரும் பெயல் ஒளிப்ப, குன்று வறம் கூரச் சுடர் சினம் திகழ, அருவி அற்ற பெரு வறற் காலையும், அருஞ் செலல் பேர் ஆற்று இருங் கரை உடைத்து, 15 கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய, வரைவு இல் அதிர்சிலை முழங்கி, பெயல் சிறந்து, ஆர் கலி வானம் தளி சொரிந்தாஅங்கு, உறுவர் ஆர ஓம்பாது உண்டு, நகைவர் ஆர நன் கலம் சிதறி, 20 'ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரற் பாடு விறலியர் பல் பிடி பெறுக! துய் வீ வாகை, நுண் கொடி உழிஞை, வென்றி மேவல், உரு கெழு சிறப்பின், கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக! 25 மன்றம் படர்ந்து, மறுகு சிறைப் புக்கு, கண்டி நுண் கோல் கொண்டு, களம் வாழ்த்தும் அகவலன் பெறுக, மாவே!' என்றும், இகல் வினை மேவலை ஆகலின், பகைவரும் தாங்காது புகழ்ந்த, தூங்கு கொளை முழவின், 30 தொலையாக், கற்ப!-நின் நிலை கண்டிகுமே!- நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது, நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி, நிறைந்து நெடிது இராத் தசும்பின், வயிரியர் உண்டெனத் தவாஅக் கள்ளின் 35 வண் கை வேந்தே! நின் கலி மகிழானே. துறை : இயல்மொழி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : ஏறா ஏணி 44. மன்னனை 'நெடுங் காலம் வாழ்க' என வாழ்த்துதல்
நிலம் புடைப்பன்ன ஆர்ப்பொடு, விசும்பு துடையூ, வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க, பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற அரிய என்னாது ஓம்பாது வீசி, கலம் செலச் சுரத்தல் அல்லது, கனவினும், 5 'களைக' என அறியாக் கசடு இல் நெஞ்சத்து, ஆடு நடை அண்ணல்! நின் பாடு மகள் காணியர்- காணிலியரோ-நிற் புகழ்ந்த யாக்கை முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை: நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை 10 சேணன்ஆயினும், 'கேள்' என மொழிந்து, புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு, அரண்கள் தாவுறீஇ, அணங்கு நிகழ்ந்தன்ன மோகூர் மன்னன் முரசம் கொண்டு, நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து, 15 முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி, ஒழுகை உய்த்தோய்! கொழு இல் பைந் துணி வைத்தலை மறந்த துய்த் தலைக் கூகை கவலை கவற்றும் குரால்அம் பறந்தலை, முரசுடைத் தாயத்து அரசு பல ஓட்டி, 20 துளங்கு நீர் வியலகம் ஆண்டு, இனிது கழிந்த மன்னர் மறைத்த தாழி, வன்னி மன்றத்து விளங்கிய காடே. துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : நோய் தபு நோன் தொடை 45. வென்றிச் சிறப்பு
பொலம் பூந் தும்பை, பொறி கிளர் தூணி, புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின், ஒசிவுடை வில்லின், ஒசியா நெஞ்சின், களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின், விழுமியோர் துவன்றிய அகல் கண் நாட்பின், 5 எழுமுடி மார்பின் எய்திய சேரல்! குண்டு கண் அகழிய மதில் பல கடந்து, பண்டும் பண்டும் தாம் உள் அழித்து உண்ட நாடு கெழு தாயத்து நனந் தலை அருப்பத்துக் கதவம் காக்கும் கணை எழு அன்ன, 10 நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சி, பிணம் பிறங்கு அழுவத்து, துணங்கை ஆடி, சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் ஓடாப் பீடர் உள் வழி இறுத்து, முள் இடுபு அறியா ஏணி, தெவ்வர் 15 சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல், அனைய பண்பின் தானை மன்னர்- இனி யார் உளரோ, முன்னும் இல்லை- மழை கொளக் குறையாது, புனல் புக நிறையாது, விலங்கு வளி கடவும் துளங்கு இருங் கமஞ் சூல், 20 வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு, முழங்கு திரைப் பனிக் கடல் மறுத்திசினோரே? துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர் : ஊன் துவை அடிசில் |