உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முடிவுரை ‘மாலவல்லியின் தியாகம்’ என்ற இந்த சரித்திர நவீனத்தை கல்கி வார இதழில் தொடராக எழுதி வந்தார் திரு.கி.ரா.கோபாலன். ஆனால் எதிர்பாராதவிதமாக இந்தக் கதை முடிவதற்கு நான்கு மாதங்களுக்கு முன் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று திரு. கி.ரா. கோபாலன் மறைந்துவிட்டார். அவர் மறைந்தாலும், கதையின் முடிவையும், அந்தப் பகுதிக்கான சரித்திர சம்பந்தமான குறிப்புக்களையும் வைத்து விட்டே போயிருந்தார். அந்தக் குறிப்புக்களை வைத்துக் கொண்டு மிகச் சிறந்த முறையில் கடைசி பத்து அத்தியாயங்களையும் எழுதி முடித்தார் திரு ஸோமாஸ். கதையின் போக்கில் ஒரு சிறு தடையும் இல்லாமல் சுவையுடனும் திரு ஸோமாஸ் அவர்கள் எழுதியிருப்பதை படிக்கும் போது உணரலாம். |