உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ் திருப்புகழ் முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய பக்தி நூல் ஆகும். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன. திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை. அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் (இப் பாயிரம் பூர்வத்துள்ள அபியுக்தர்களால் செய்யப்பட்டுப் புராதன பிரதிகளில் எழுதி வழங்கி வருவது.) 1. நூற் சிறப்பு எல்லாரும் ஞானத் தெளிஞரே? கேளீர்சொல் கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? - பொல்லாக் கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன் திருப்புகழைக் கேட்குஞ் செவி? 1 மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ? ஆணிப்பொன் கையுறுவார்க் கையுறவேன்? - பேணிப்பின் செவ்வேல் விநோதன் திருப்புகழ்சிந் தித்திருப்பார்க் கெவ்வேலை வேண்டும் இனி? 2 சீராந் திருப்புகழைச் செவ்வேள்மேல் அன்பாக ஆராய்ந் துரைத்தான் அருணகிரி; - நேராக அந்தப் புகழை அநுதினமும் ஓதாமல் எந்தப் புகழோது வீர்? 3 அருணகிரி நாதன் அகிலதலத் துன்னைக் கருணையினாற் பாடுங் கவிபோற் - பிரியமுற வேறுமோர் புன்கவிகள், வேலோனே! நின் செவியில் ஏறுமோ? என்னே இனி? 4 ஆனைமுக வற்கிளைய ஐயா! அருணகிரி தேனனைய சொல்லான் திருப்புகழை - யானினைந்து போற்றிடவும் நின்னைப் புகழ்ந்திடவும் பொற்கமலஞ் சாத்திடவும் ஓதிடவும் தா. 5 2. திருப்புகழ்ச் சிரவணத்தால் வேதார்த்தாதி அனைத்து அறியலாம்; ஆதலால் அதனையே கேட்க என்றது வேதம்வேண் டாம் சகல வித்தைவேண் டாம்கீத நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம், - ஆதி குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந் திருப்புகழைக் கேளீர் தினம். 6 3. நூற் பயன் ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந் நாளும் வானம் அரசாள் வரம் பெறலாம் - மோனாவீ டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக் கூறினார்க் காமேஇக் கூறு. 7 ஆறுமுகந் தோன்றும் அழகியவேல் தோன் றுமவன் ஏறுமயில் தோன்றும் எழில்தோன்றும் - சீறிவரு சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப் பாரில் வழுத்தினோர் பால். 8 4. அன்பர் வினவ ஆண்டவன் விடையருளியதாக மேலையதை வற்புறுத்தியது பொருப்பது பொடிப்பட விடுத்திடுகை வேலா இருப்பிடம் உனக்கெது எனக்கரு ளியம்பாய்; உருக்க நல் விழுக்குலம் ஒழுக்கமில ரேனும் திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம். 9 5. அங்ஙனம் அருளக் கேட்ட அன்பர் ஆண்டவனை நோக்கிக் கூறியதாகத் திருப்புகழ் படிப்போர் தீரங் கூறியது திருப்புகழ் படிக்குமவர் சிந்தைவலு வாலே ஒருத்தரை மதிப்பதிலை உன்றனரு ளாலே பொருப்புக மிகப்பொருது வென்றுமயில் மீதே தரித்தொரு திருத்தணியில் நின்றபெரு மாளே. 10 6. நூலாசிரியர் பெயரோடு நூற்பண்பும் பெயரும் உணர்த்தி அதனைத் துதிப்போர் பேறுங் கூறியது ஓராறு மாமுகனாம் உச்சிதமெய்ஞ் ஞானகுகன் பேரால் அருணகிரி பேருலகில் - சீராருந் தோத்திரம தாகத் துதிக்குந் திருப்புகழை ஏத்தினவர் ஈடேறு வார். 11 வள்ளிமண வாளன் மயிலேறும் வள்ளல்தனைத் தெள் ளுதமி ழாற்புனைந்து சீர்பெறவே - உள்ளபடி வைப்பாம் அருணகிரி வாழ்த்துந் திருப்புகழைக் கற்பார் கரையேறு வார். 12 7. திருப்புகழ் இன்ன இன்னதற்கு இன்ன இன்னதாம் எனல் அருணகிரி நாதர்பதி னாயிறா யிரமென் றுரைசெய் திருப்புகழை யோதீர், - பரகதிக்கஃ தேணி; அருட்கடலுக் கேற்றம்; மனத்தளர்ச்சிக் காணி; பிறவிக் கரம். 13 8. திருப்புகழ் வழிபாட்டாற் கூற்றையும் வெல்லலாம் எனக் கெடி பெற உரைத்தது திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத் திருப்புகழை நித்தஞ் செபிக்கத் - திருப்புகழை அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே, கூற்றைவென்று கெர்ச்சிக்க லாமே கெடீ. 14 9. திருப்புகழின் பிரபாவம் மடங்கல் நடுங்கும் தனைச்சுடும் ஈதென்று; மாதிரத்தோர் அடங்கி நடுங்குவர் சூலா யுதமென், றசுரர் கடல் ஒடுங்கி நடுங்குவர் வேலா யுதமென், றுரகனுங்கீழ்க் கிடங்கில் நடுங்கும், மயிலோன் திருப்புகழ் கேட்டளவே. 15 10. திருப்புகழடியார் பெருமை திருப்புகழ் வல்ல சூரர்மகன் நாயகன், சங்கரற்குக் குருப்புகழ் வல்ல குமரேசன், சண்முகன், குன்றெறிந்தோன் மருப்புகழ் வல்ல அருண கிரிப்பெயர் வள்ளல் சொன்ன திருப்புகழ் வல்லவர் சீர்பாதத் தூளிஎன் சென்னியதே. 16 திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் முற்றிற்று. முருகன் துதி ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும் ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே. பாடல் 1 - விநாயகர் துதி ராகம் - நாட்டை; தாளம் - ஆதி தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன ...... தனதான கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை ...... கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய ...... மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடிசெய்த ...... அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை ...... இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் ...... பெருமாளே. 1 பாடல் 2 - விநாயகர் துதி ராகம் - நாட்டை / மோகனம்; தாளம் - ஆதி தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும் திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு சிற்றடியு முற்றியப ...... னிருதோளும் செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய் எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண் டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள ரிப்பழமி டிப்பல்வகை ...... தனமுலம் மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள் வித்தகம ருப்புடைய ...... பெருமாளே. 2 பாடல் 3 - விநாயகர் ராகம் - ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி; தாளம் - அங்கதாளம் (8) தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3 தந்ததனத் தானதனத் ...... தனதான உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும் என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே. 3 பாடல் 4 - விநாயகர் ராகம் - ஹம்ஸத்வனி; தாளம் - அங்கதாளம் (7 1/2) தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகஜனு-2 தனன தனதன தத்தன தத்தன தனன தனதன த்ததன தத்தன தனன தனதன த்ததன தத்தன ...... தனதான நினது திருவடி சத்திம யிற்கொடி நினைவு கருதிடு புத்திகொ டுத்திட நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன் நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம் நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும் மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு மகர சலநிதி வைத்தது திக்கர வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே தெனன தெனதென தெத்தென னப்பல சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல் திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறமுளை செரும உதரநி ரப்புசெ ருக்குடல் நிரைய அரவநி றைத்தக ளத்திடை திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே எனவெ துகுதுகு துத்ததென ஒத்துகள் துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்றுந டித்திட எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே. 4 பாடல் 5 - விநாயகர் ராகம் - கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2) தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதான விடமடைசு வேலை அமரர்படை சூலம் விசையன்விடு பாண ...... மெனவேதான் விழியுமதி பார விதமுமுடை மாதர் வினையின் விளை வேதும் ...... அறியாதே கடியுலவு பாயல் பகலிரவெ னாது கலவிதனில் மூழ்கி ...... வறிதாய கயவனறி வீனன் இவனுமுயர் நீடு கழலிணைகள் சேர ...... அருள்வாயே இடையர்சிறு பாலை திருடிகொடு போக இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே இதயமிக வாடி யுடையபிளை நாத கணபதியெ னாம ...... முறைகூற அடையலவர் ஆவி வெருவஅடி கூர அசலுமறி யாமல் ...... அவரோட அகல்வதென டாசொல் எனவுமுடி சாட அறிவருளும் ஆனை ...... முகவோனே. 5 பாடல் 6 - நூல் ராகம் - கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2) தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை கோட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே. 6 பாடல் 7 - திருப்பரங்குன்றம் ராகம் - .....; தாளம் - ......... தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான அருக்கு மங்கையர் மலரடி வருடியெ கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற் றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென ...... மிகவாய்விட் டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம் உறக்கை யின்கனி நிகரென இலகிய ...... முலைமேல்வீழ்ந் துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற உரைத்த சம்ப்ரம சரவண பவகுக இதத்த இங்கிதம் இலகிய அறுமுக ...... எழில்வேளென் றிலக்க ணங்களும் இயலிசை களுமிக விரிக்கும் அம்பல மதுரித கவிதனை இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை ...... புனைவோனே செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழி அடியவர் திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர் திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு குருக்க ளின்திற மெனவரு பெரியவ திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே. 7 பாடல் 8 - திருப்பரங்குன்றம் ராகம் - ஸாவேரி; தாளம் - ஆதி தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை உறைப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன் உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள் கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே தெனத்தெ னந்தன எனவரி யளிநறை தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ் திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே. 8 பாடல் 9 - திருப்பரங்குன்றம் ராகம் - ஹிந்தோளம் / வராளி; தாளம் - அங்கதாளம் (7) (திஸ்ரத்ருபுடை)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2 தனனதந்த தத்தத்த தந்த தனனதந்த தத்தத்த தந்த தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான கருவடைந்து பத்துற்ற திங்கள் வயிறிருந்து முற்றிப்ப யின்று கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக் கழுவியங்கெ டுத்துச்சு ரந்த முலையருந்து விக்கக்கி டந்து கரறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி அரைவடங்கள் கட்டிச்ச தங்கை இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து பிணியுழன்று சுற்றித்தி ரிந்த தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி னரசரென்றும் ஒப்பற்ற உந்தி யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன் எரியதென்றும் ருத்ரற்சி றந்த அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர் எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ அரியதன்ப டைக்கர்த்த ரென்று அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே அயனையும்பு டைத்துச்சி னந்து உலகமும்ப டைத்துப்ப ரிந்து அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே. 9 பாடல் 10 - திருப்பரங்குன்றம் ராகம் - ....; தாளம் - ....... தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு கனிக்குள் இன்சுவை அழுதுகும் ஒருசிறு ...... நகையாலே களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர் கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர நகத்த ழுந்திட அமுதிதழ் பருகிய ...... மிடறுடே நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென இசைத்து நன்கொடு மனமது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயே நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ...... வரைபோலும் நிவத்த திண்திகழ் நிசிசர ருரமொடு சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு புழைக்கை தண்கட கயமுக மிகவுள சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனே சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே. 10 பாடல் 11 - திருப்பரங்குன்றம் ராகம் - சங்கராபரணம் / நீலாம்பரி; தாளம் - திஸ்ரத்ருபுடை (7) தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன ...... தனதான கனகந்திரள் கின்றபெ ருங்கிரி தனில்வந்துத கன்தகன் என்றிடு கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே கடமிஞ்சி அநந்தவி தம்புணர் கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே பனகந்துயில் கின்றதி றம்புனை கடல்முன்புக டைந்தப ரம்பரர் படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே பலதுன்பம்உழன்றுக லங்கிய சிறியன்புலை யன்கொலை யன்புரி பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி புரமுந்திரி வென்றிட இன்புடன் அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே அடல்வந்துமு ழங்கியி டும்பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர் மனமுந்தழல் சென்றிட அன்றவர் உடலுங்குட லுங்கிழி கொண்டிட மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே மதியுங்கதி ருந்தட வும்படி உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே. 11 பாடல் 12 - திருப்பரங்குன்றம் ராகம் - ....; தாளம் - ....... தானன தந்தன தந்தனந் தந்தன தானன தந்தன தந்தனந் தந்தன தானன தந்தன தந்தனந் தந்தன ...... தனதான காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி வாளிம யங்கம னம்பயந் தந்திருள் கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு ...... தொருகோடி காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை யாழியு டன்கட கந்துலங் கும்படி காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு ...... மயலாலே வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித மாகந டந்தவர் பின்திரிந் துந்தன மார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம ...... துழலாதே வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி மாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு வாழநி தம்புனை யும்பதந் தந்துன ...... தருள்தாராய் போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ போதவ ளஞ்சிவ சங்கரன் கொண்டிட ...... மொழிவோனே பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி ணவம டந்தைபு ரந்தரன் தந்தருள் பூவைக ருங்குற மின்கலந் தங்குப ...... னிருதோளா தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு ...... திறலோனே சீதள முந்தும ணந்தயங் கும்பொழில் சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை ...... பெருமாளே. 12 பாடல் 13 - திருப்பரங்குன்றம் ராகம் - ஹிந்தோளம் ; தாளம் - அங்கதாளம் (7 1/2) தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3 தந்தனந் தத்தத் ...... தனதான சந்ததம் பந்தத் ...... தொடராலே சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும் கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா தென்பரங் குன்றிற் ...... பெருமாளே. 13 பாடல் 14 - திருப்பரங்குன்றம் ராகம் - .....; தாளம் - .... தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன தனதந்தன தந்தன தந்தன ...... தனதான சருவும்படி வந்தனன் இங்கித மதனின்றிட அம்புலி யுஞ்சுடு தழல்கொண்டிட மங்கையர் கண்களின் ...... வசமாகிச் சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட ...... திறமாவே இரவும்பகல் அந்தியு நின்றிடு குயில்வந்திசை தெந்தன என்றிட இருகண்கள்து யின்றிட லின்றியும் ...... அயர்வாகி இவணெஞ்சுப தன்பதன் என்றிட மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன் இனியுன் றன்ம லர்ந்தில கும்பதம் ...... அடைவேனோ திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள் மனையின்தயிர் உண்டவன் எண்டிசை திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ...... பயில்வோர்பின் திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல் செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் ...... முருகோனே மதியுங்கதி ரும்புய லுந்தின மறுகும்படி அண்டம் இலங்கிட வளர்கின்றப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே. 14 பாடல் 15 - திருப்பரங்குன்றம் ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஸங்கீர்ண சாபு (4 1/2) (எடுப்பு - அதீதம்)
தக-1, திமி-1, தகிட-1 1/2, தக-1 தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந் ......தனதான தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண் டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத் தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந் தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற் கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங் கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக் கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங் கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன் புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப் பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம் பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங் குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே. 15 பாடல் 16 - திருப்பரங்குன்றம் ராகம் - ......; தாளம் - ......... தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் ...... தனதான பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம் பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும் பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் ...... தனபாரம் படப்புயங் கம்பற் கக்குக டுப்பண் செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும் பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் ...... றிளைஞோர்கள் துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன் புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந் துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் ...... கொடியார்பால் துவக்குணும் பங்கப் பித்தன வத்தன் புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந் துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங் கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன் குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் ...... கதிர்வேலா குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண் தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங் குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் ...... குகுகூகூ திதித்திதிந் திந்தித் தித்தியெ னக்கொம் பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந் திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் ...... கொலைவேடர் தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண் டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண் திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் ...... பெருமாளே. 16 பாடல் 17 - திருப்பரங்குன்றம் ராகம் - ...... ; தாளம் - தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன ...... தந்ததான பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய பிணக்கிடுஞ் சண்டிகள் ...... வஞ்சமாதர் புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர் முருக்குவண் செந்துவர் ...... தந்துபோகும் அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல் அறச்சிவந் தங்கையில் ...... அன்புமேவும் அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன் அருட்பதம் பங்கயம் ...... அன்புறாதோ மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர் விதித்தெணுங் கும்பிடு ...... கந்தவேளே மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு மிசைக்கிடுஞ் செந்தமிழ் ...... அங்கவாயா பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு திறற்செழுஞ் சந்தகில் ...... துன்றிநீடு தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை திருப்பரங் குன்றுறை ...... தம்பிரானே. 17 பாடல் 18 - திருப்பரங்குன்றம் ராகம் - ......; தாளம் - ....... தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன ...... தனதான மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர் மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில் ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய உந்தியென் கின்றமடு ...... விழுவேனை உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும் ஒண்டகம் பும்புனையும் ...... அடிசேராய் பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள் பண்டையென் பங்கமணி ...... பவர்சேயே பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர பண்டிதன் தம்பியெனும் ...... வயலுரா சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர் செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர் தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே. 18 பாடல் 19 - திருப்பரங்குன்றம் ராகம் - ...........; தாளம் - ......... தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை தனைத்த றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர் மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு ...... மையினாலே வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் ...... தொடுபோதே விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல் விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு ...... தொழில்தானே விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ ...... துளதோதான் குடத்தை வென்றிரு கிரியென எழில்தள தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு ...... வடிவேலா குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம் அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர் குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி ...... மருகோனே திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயிற்கொ டும்படை விடுசர வணபவ திறற்கு கன்குரு பரனென வருமொரு ...... முருகோனே செழித்த தண்டலை தொறுமில கியகுட வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர் திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய ...... பெருமாளே. 19 பாடல் 20 - திருப்பரங்குன்றம் ராகம் - ..... ; தாளம் - ..... ; தனத்தனந் தந்ததான தனத்தனந் தந்ததான தனத்தனந் தந்ததான ...... தனதான வரைத்தடங் கொங்கை யாலும் வளைப்படுஞ் செங்கை யாலும் மதர்த்திடுங் கெண்டையாலும் ...... அனைவோரும் வடுப்படுந் தொண்டை யாலும் விரைத்திடுங் கொண்டை யாலும் மருட்டிடுஞ் சிந்தை மாதர் ...... வசமாகி எரிப்படும் பஞ்சு போல மிகக்கெடுந் தொண்ட னேனும் இனற்படுந் தொந்த வாரி ...... கரையேற இசைத்திடுஞ் சந்த பேதம் ஒலித்திடுந் தண்டை சூழும் இணைப்பதம் புண்ட ணகம் ...... அருள்வாயே சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன் இளக்ரவுஞ் சந்த னோடு துளக்கெழுந் தண்ட கோளம் ...... அளவாகத் துரத்தியன் றிந்த்ர லோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே செருக்கெழுந் தும்பர் சேனை துளக்கவென் றண்ட மூடு தெழித்திடுஞ் சங்க பாணி ...... மருகோனே தினைப்புனஞ் சென்று லாவு குறத்தியின் பம்ப ராவு திருப்பரங் குன்ற மேவு ...... பெருமாளே. 20 |