தினசரி தியானம்

கால அளவை

     கால அளவையைக் கருத்தில் வாங்காது, என் கடமையைக் கரவாது நான் செய்து வருவேனாக.

     காலத்தைப் பொருட்படுத்தாது இயற்கை தன் கடனாற்றுகிறது. வால் நக்ஷத்திரம் ஒன்று ஒரு தடவை வட்டமிடுதற்கு ஓராயிரம் ஆண்டு எடுத்துக் கொள்ளலாம். கரையிலுள்ள கல்லைத் தேய்ப்பதற்கு கடல் பதினாயிரம் ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். எத்தனை காலம் என்று ஏங்கியிருப்பது இயற்கையினிடத்தில்லை. மனிதன் மட்டும் தனது அற்ப காரியம் அதிவிரைவில் நிறைவேறவேண்டுமென்று ஆத்திரப்படுவது எதற்காக?

காலமொரு மூன்றும் கருத்திலுணர்ந்தாலும் அதை
ஞாலந் தனக்குரையார் நல்லோர் பராபரமே.

-தாயுமானவர்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.