உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 26 ... 28. காரிய காரண உபாதி * (* காரணவுபாதி)
2501 செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும் பற்றும் பரோபதி ஏழும் பகருரை உற்றிடும் காரிய காரணத் தோடற அற்றிட அச்சிவ மாகும் அணுவனே. 1
2502 ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு வேறாய் நனவு மிகுந்த கனாநனா ஆறாறு அகன்ற கழுத்தி அதில் எய்தாப் பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே. 2
2503 அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் * சிவமாய் # வருமுப் பதத்துச் சிகாரம் $ சிவமே வகாரம் பரமே அகாரம் உயிரென்று அறையலும் ஆமே. 3 * மலமாய் # வருமுப்பத்தாறிற் $ சிவமாய் வகாரம் வடிவமாய்
2504 உயிர்க்குயி ராகி ஒழிவற்று அழிவற்று அயிர்ப்புஅறும் காரணோ பாதி விதிரேகத்து உயிர்ப்புறும் ஈசன் உபமிதத் தால்அன்றி வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாவே. 4
2505 காரியம் ஏழில் கலக்கும் கடும்பசு காரணம் ஏழில் கலக்கும் பரசிவன் காரிய காரணம் கற்பனை சொற்பதப் பாரறும் பாழில் பராபரத் தானே. 5 29. உபசாந்தம்
2506 முத்திக்கு வித்து முதல்வன்தன் * ஞானமே பத்திக்கு வித்துப் பணிந்துற்றப் பற்றலே சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல் சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே. 1 * நாமமே
2507 காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி காரிய காரண வாதனைப் பற்றறப் பாரண வும் உப சாந்தப் பரிசிதே. 2
2508 அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத் தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே. 3
2509 ஆறாதுஅமைந்துஆண வத்தையுள் * நீக்குதல் பேறான தன்னை அறிதல் பின் தீர்சுத்தி # கூறாத சாக்கிரா தீதம் குருபரன் பேறாம் வியாத்தம் பிறழ்உப சாந்தமே. 4 * நீங்குதற் # கூறான
2510 வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப் போய் ஏய்ந்த சிவமாத லின்சிவா னந்தத்துத் தோய்ந்தறல் மோனச் சுகானுபவத் தோடே ஆய்ந்துஅதில் தீர்க்கை யானதுஈர் ஐந்துமே. 5
2511 பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த் திரையின்நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று உரையுணர்ந்து ஆரமு * தொக்க உணர்ந்துளோன் கரைகண் டானுரை அற்ற கணக்கிலே. 6 * மொக்க 30. புறங்கூறாமை
2512 பிறையுள் கிடந்த முயலை எறிவான் அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக் கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார் நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே. 1
2513 கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக் கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே அருந்தர அலைகடல் ஆறுசென் றாலே. 2
2514 கருதலர் மாளக் கருவாயில் நின்ற பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால் தருவலர் கேட்ட தனியும்ப ராமே. 3
2515 பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும் இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில் கணம்பதி னெட்டும் கழலடி காண வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே. 4
2516 என்னிலும் என்னுயி ராய இறைவனைப் பொன்னிலும் மாமணி யாய புனிதனை மின்னிய * வெவ்வுய ராய விகிர் தனை உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே. 5 * லெவ்வுயி; லெவ்வுரு வாய
2517 நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும் வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுவந்து ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே. 6
2518 நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும் எண்ணறி வாய் * நின்ற எந்தை பிரான்தன்னைப் பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை விண்அறி வாளர் விரும்புகின் றாரே. 7 * நிறை
2519 விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக் கண்ணற வுள்ளே கருதிடின் காலையில் எண்உற வாசமுப் போதும் இயற்றிநீ பண்ணிடில் தன்மை பராபர னாமே. 8
2520 ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன் பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன் கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன் பொன்றாத போது புனைபுக ழானே. 9
2521 போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி * ஏற்றியே # தென்றும் எறிமணி தான்அகக் காற்றின் விளக்கது காயம் மயக்குறும் அற்றலும் கேட்டது மன்றுகண் டேனே. 10 * ஏற்றிய; போற்றிய # சென்றும்
2522 நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியை ஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லை கூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண் மூடிக்கண் டேனுல கேழுங்க்ண் டேனே. 11
2523 ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந் தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுகண் டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு வானகஞ் செய்யு மறவனு மாமே. 12
2524 மாமதி யாமதி யாய்நின்ற மாதவர் தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந் தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக் காமல மற்றார் அமைவுபெற் றாரே. 13
2525 பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட் டிதமுற்ற பாச இருளைத் துரந்து மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே. 14
2526 சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன் சுத்தாசுக் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர் முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச் சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே. 15 31. எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை
2527 உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை யீசன் நிதித்தெண் டிசையு நிறைந்துநின் * றாரே. 1 * றானே
2528 ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும் மருங்கிய மாயா புரியத னுள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே. 2
2529 மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும் விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர் எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற் பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே. 3
2530 ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுபொருள் தானே. 4 (இப்பாடல் 2979-ம் பாடலாகவும் வந்துள்ளது)
2531 திகையெட்டும் தேரேட்டும் தேவதை எட்டும் வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே. 5
2532 ஏழுஞ் சகளம் இயம்புங் கடந்தெட்டில் வாழும் பரமென் றதுகடந் தொன்பதில் ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில் தாழ்வது வான தனித்தன்மை தானே. 6
2533 பல்லூழி பண்பன் பகலோன் இறையவன் நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள் செல்லூழி அண்டத்துக் சென்றவவ் வூழியுள் அவ்வூழி யுச்சியு ள்ஒன்றிற் பகவனே. 7
2534 புரியும் உலகினிற் பூண்டவெட் டானை திரியுங் * களிற்றொடு தேவர் குழாமும் எரியு மழையும் இயங்கும் வெளியும் பரியுமா காசத்திற் பற்றது தானே. 8 * களிறொடு
2535 ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவின்றிச் சூடான் புரிசடை யோனே. 9
2536 ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும் வென்று மிருந்து விகிர்தனை நாடுவர் சென்றும் இருந்தும் திருவடை யோரே. 10 32. ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி
2537 தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன் நற்பத விராட்டன்பொன் கர்ப்பனவ் யாகிர்தன் பிற்பதஞ் * சொலிதையன் பிரசா பத்தியன் பொற்புவி சாந்தன் பொருதபி மானியே. 1 * சிற்சொலிதை
2538 நவமாம் அவத்தை நன்வாதி பற்றிற் பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத் தவமான சத்திய ஞானப் பொதுவிற் றுவமார் துரியஞ் சொருபம தாமே. 2
2539 சிவமான சிந்தையிற் சீவன் சிதைய பவமான மும்மலம் பாறிப் பறிய நவமான அந்தத்தின் நற்சிவ போதந் தவமான மவையாகித் தானல்ல வாகுமே. 3
2540 முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந் தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத் தன்செயத வாண்டவன் றான்சிறந் தானே. 4
2541 உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம் பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும் இகந்தன வல்வினை யோடறுத் தானே. 5
2542 நலம்பல காலந் தொகுத்தன நீளங் குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும் பலம்பல பன்னிரு கால நினையும் நிலம்பல வாறின் நீர்மையன் றானே. 6
2543 ஆதி பராபர மாகும் பராபரை சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம் ஓதுங் கமைமாயே யோரிரண் டோர்முத்தி நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே. 7
2544 தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து வேறாத நரக சுவர்க்கமும் மேதினி ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான் வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே. 8
2545 ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி நன்பாற் பயிலு நவதத் துவமாதி ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச் செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே. 9 33. சுத்தாசுத்தம்
2546 நாசி நுனியினின் நான்குமூ விரலிடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி யிருக்கும் பெருமறை யம்மறை கூசி யிருக்குங் குணமது வாமே. 1
2547 கருமங்கள் * ஒன்று கருதுங் கருமத் துரிமையுங் கன்மமும் முன்னும் பிறவிக் கருவினை யாவது கண்டகன் றன்பின் புரிவன கன்மக் கயத்துட் புகுமே. 2 * ஒன்றுட்
2548 மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள் மாயை மறைய மறையவல் லார்கட்குக் காயமும் இல்லை கருத்தில்லை தானே. 3
2549 மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக் கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில் ஆழ அடைந்தங் கனலிற் புறஞ்செய்து தாழ அடைப்பது தன்வலி யாமே. 4
2550 காயக் குழப்பனைக் காயநன் னாடனைக் காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து ளே * யெங்குந் தேடித் திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்தறி யாரே. 5 * யென்றுந் தேடித் திரிபவர்
2551 ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின் ஆசூச மானிடம் ஆசூச மாமே. 6
2552 ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே. 7
2553 வழிபட்டு நின்று வணங்கு மவர்ககுச் சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே. 8
2554 தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும் தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத் தூய்மணி தூயனல் தூயவு மாமே. 9
2555 தூயது வாளா வைத்தது தூநெறி தூயது வாளா நாதன் திருநாமம் தூயது வாளா அட்டமா சித்தியும் தூயது வாளா தூயடிச் சொல்லே. 10
2556 பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை அருளது போற்றும் அடியவ ரன்றிச் சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின் மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே. 11
2557 வினையா மசத்து விளைவ துணரார் வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார் வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார் வினையாளார் மிக்க விளைவறி யாரே. 12 34. முத்திநிந்தை * (* மோக்ஷநிந்தை)
2558 பரகதி யுண்டென இல்லையென் போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடு வார்கடை தோறும் துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே. 1
2559 கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள் பாடகில் லாரவன் செய்த பரிசறிந் தாடவல் லாரவர் * பேறெது வாமே. 2 * பேறிது
2560 புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில் திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி அறப்பட்ட மற்றப் பதியென் * றழைத்தேன் இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே 3 * றழைக்கில்
2561 திடரிடை நில்லாத நீர்போல் ஆங்கே உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக் கடலிடை நில்லாக் கலஞ்சேரு மாபோல் அடலெரி வண்ணனும் அங்குநின் றானே. 4
2562 தாமரை நூல்போல் தடுப்பார் பரந்தொடும் போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர் காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள் தீநெறி செல்வான் திரிகின்ற வாறே. 5
2563 மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன் காடும் மலையுங் கழனி கடந்தோறும் ஊடும் உருவினை யுன்னிகி லாரே. 6
2564 ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் போவார் குடக்கும் குணக்கும் குறுவழி நாவினின் மந்திர * மென்று நடுவங்கி வேவது செய்து விளங்கிடு # வீரே. 7 * மொன்று # நீரே
2565 மயக்குற நோக்கினும் மாதவஞ் * செய்யார் தமக்குறப் பேசின தாரணை கொள்ளார் சினக்குறப் பேசின தீவினை யாளர் தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே. 8 * செய்வார் 35. இலக்கணாத் திரயம்
2566 விட்ட விலக்கணைதான்போம் * வியோமத்துத் தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும் விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற் சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே. 1 * வியமத்துத்
2567 வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின் கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன வில்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக் கல்கலன் என்னக் கதிரெதி யாமே. 2 36. தத்துவமசி வாக்கியம்
2568 சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார் தாவு பரதுரி யத்தனில் தற்பதம் மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத மோவி விடும் தத் துவமசி உண்மையே. 1
2569 ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம் ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப் பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து வீறான தொந்தத் தசிதத்வ மசியே. 2
2570 ஆகிய வச்சோயம் தேவகத் தன்னிடத் தாகிய விட்டு விடாத விலக்கணைத் * தாருப சாந்தமே தொந்தத் தசியென்ப ஆகிய சீவன் பரன்சிவ னாமே. 3 * தாகும் பதார்த்தமே
2571 * துவந்தத் தசியே தொந்தத் தசியும் அவைமன்னா வந்து வயத்தேகமான தவமுறு தத்துவ மசிவே தாந்த # சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே. 4 * துவம்சித்தசியே தொந்தத் தசியும் # சிவமாகும் தொம்மசி சித்தாந்த வேதமே
2572 துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரமென்ப ராகாரி தன்றென்னார் உரிய பரம்பர மாமொன் றுதிக்கும் அருநிலம் என்பதை யாரறி வாரே. 5
2573 தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம் நம்பிய முத்துரி யத்துமே னாடவே யும்பத மும்பத மாகும் உயிர்பரன் செம்பொரு ளான சிவமென லாமே. 6
2574 வைத்த துரிய மதிற்சொரு பானந்தத் துய்த்த பிரணவ மாமுப தேசத்தை மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர் வைத்த படியே யடைந்து நின்றானே. 7
2575 நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப் பினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத் தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி மனவா சகங்கெட்ட மன்னனை நாடே. 8
2576 பூரணி யாது புறம்பொன்றி லாமையின் பேரணி யாதது பேச்சொன்றி லாமையின் ஓரணை யாததுவொன்றுமி லாமையிற் காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே. 9 மகா வாக்கியம்
2577 நீயது வானா யெனநின்ற பேருரை ஆயது நானானேன் என்னச் சமைந்தறச் சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள் ஆயது வாயனந் தானந்தி யாகுமே. 10
2578 உயிர்பர மாக உயர்பர சீவன் அரிய சிவமாக அச்சிவ வேதத்து இரியிலுஞ் சீராம் பராபரன் என்ன உரிய உரையற்ற வோமய மாமே. 11
2579 வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில் ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும் தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி சேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே. 12
2580 அறிவறி யாமை இரண்டும் அகற்றிப் செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப் பிறிவறி யாது பிரானென்று பேணுங் குறியறி யாதவர் கொள்ளறி யாரே. 13
2581 அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்புங் கலப்பும் அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால் அறிவான் அறிந்த அறிவறி யோமே. 14
2582. அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா மதிபெற் றுருள்விட்ட மன்னுயி ரொன்றாம் பதியிற் பதியும் பரவுயிர் தானே. 15
2583 அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன் முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப் படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங் கடிதொழ காணென்னுங் கண்ணுத லானே. 16
2584 நின்மல மேனி நிமலன் பிறப்பிலி என்னுளம் வந்திவன் என்னடி யானென்று பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன் நின்மல மாகென்று நீக்கவல் லானே. 17
2585 துறந்துபுக் கொள்ளொளி சோதியைக் கண்டு பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே மறந்தறி யாவென்னை வான்வர் கோனும் இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே. 18
2586 மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் மெய்த் தோற்றத் தவ்வாய அந்தக் கரணம் அகில்மும் எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற் கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே. 19 37. விசுவக் கிராசம்
2587 அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில் எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப் பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே. 1
2588 உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற் படருஞ் சிவசத்தி தாமே பரமாம் உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக் கடையுந் தலையுங் கரக்குஞ் சிவத்தே. 2
2589 செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம் அவியின் றியமன மாதிகள் ஐந்துங் குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து தவிர்வொன் றிலாத சராசரந் தானே. 3
2590 பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும் திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும் உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும் வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே. 4
2591 அளந்து துரியத் தறிவினை வாங்கி உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக் கிளர்ந்த பரஞ்சிவஞ் சேரக் கிடைத்தால் விளங்கிய வெட்ட வெளியனு மாமே. 5
2592 இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப் பரம்பர மான பரமது விட்டே உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி இருந்தஎன் நந்தி இதயத்து ளானே. 6
2593 கரியுண் விளவின் கனிபோல் உயிரும் உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும் அரிய துரியமேல் அகிலமும் எல்லாம் திரிய விழுங்குஞ் சிவபெரு மானே. 7
2594 அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன் தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன் நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே நந்தி யிருந்தனன் நாமறி யோமே. 8 38. வாய்மை
2595 அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள் குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே. 1
2596 எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை எல்லாம் அறிந்த * அறிவினை நானென்னில் எல்லாம் அறிந்த இறையென லாமே. 2 * அறிவனை
2597 தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து கலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே. 3 (இப்பாடல் 2845-ம் பாடலாகவும் வந்துள்ளது)
2598 தானே யுலகில் தலைவ னெனத்தகும் தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும் வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும் ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே. 4
2599 அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில் இருளற்ற சிந்தை இறைவனை நாடி மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவோர் தாமே. 5
2600 மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னை பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை உய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும் மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே. 6 |